புவியில் வாழும் தாவரம் முதலான உயிரினங்கள் யாவும் ஒன்றுக்கொன்று
பயன்படுவனவாக வாழ்கின்றன. மனிதன் மட்டுந்தான்
வேறு எந்த உயிரினத்திற்கும்
பயன்படாத படைப்பாக வாழ்கிறான்.
மனிதன் இல்லையேல்
புவியில் உள்ள எல்லா உயிர்களும் மகிழ்ச்சியாக வாழும். ஆனால்
மனிதன் வாழ்வதற்கு
புவியில் உள்ள எல்லாப் படைப்புகளும் பயன்படுகின்றன.
எல்லாவறையும் அனுபவிக்கும் ஏகபோகத் தகுதியுடன் மனிதன்
படைக்கப்பட்டுள்ளதால்
அவன் கண்டிப்பாக
அந்த உரிமையின் உட்பொருளை
உணர்ந்து வாழ்வதே நீதி.
ஆதலால் இறைவனுடைய பிரதிநிதியாக
இந்தப் புவியையும் புவிவாழ் உயிரினங்களையும் காப்பாற்ற வேண்டிய
தார்மீகக் கடன்
தன்னுடையது என எவன் உணர்கிறானோ
அவனே மனிதன் - அவன் மட்டுமே மனிதன்
அவன் மட்டுந்தான் இப்புவியில் வாழும் தகுதி உள்ளவன்.