அறிமுகம்

 

சிவபெருமான் திருவருள்

வாழ்க்கை, பொருளாதாரம், உறவு சிக்கல்களால் மனம் சோர்ந்து திருச்செந்தூர் கடலில் வீழ்ந்து தற்கொலை செய்வதற்காக 1999 மார்ச் 10 ஆம் நாள் சிவபுரம் ஐயா சென்றார். சிவபெருமானிடம்    

1.  நான் வாழ்வதற்கு தகுதியுடையதாக இந்த பூமி இல்லையா  

2. அல்லது இந்த பூமியில் வாழும் தகுதியுடையவனாக நான் இல்லையா

இந்த கேள்விக்கு பதில் சொல் இல்லையேல் இந்த கடலில் வீழ்ந்து உயிரை விடுவேன் என்ற உறுதியுடன் சென்றார். பேருந்திலிருந்து இறங்கியதும் யாரோ ஒருவர் வந்து "வாருங்கள் பஞ்சலிங்க தரிசனம் செய்யலாம்" என அழைத்தார். அங்கு முருகன் கோயில் என்பதைத் தவிர இப்படி ஒரு லிங்கம் இருப்பது ஐயாவிற்கு தெரியாது. அந்த அழைப்பு அவருக்கு மிகுந்த ஆச்சரியத்தை உண்டாக்கியது. தரிசனம் முடிந்தப் பின் தற்கொலை செய்ய கடலில் இறங்கிய போது சிவபெருமான் அவரை தடுத்து அவருக்கு மட்டுமே கேட்கக் கூடிய அசரீரியாக அருளினார்.

 

எம்பெருமான் அருளிய திருவார்த்தை

"இந்த உலகம் தான் நீ வாழ்வதற்கு தகுதியானதாக இல்லை. நான் இந்தப் பூமியை நேரடியாக பரிபாளனம் செய்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. மீண்டும் நான் நேரடியாக பரிபாளனம் செய்வேன். பழைய சிவாலயங்கள் புதிப்பிக்கப்படும். பிரதோஷம் தோறும் கூட்டமாக மக்கள் வந்து சிவனை வழிபடுவர். சிவபெருமான் ஒருவரே முழுமுதல் கடவுள் இதை நீ போய் சொல் ".ஐயா சிவபெருமானின் ஆணையை தலைமேல் சுமந்து மீண்டும் சென்னை வந்தார்.

 

சிவபுரம் உதயம் - 1999

தமிழ் மூலம் ஆங்கிலம் வகுப்பு நடத்திக் கொண்டிருந்த சிவபுரம் ஐயா தன்னிடம் ஆங்கிலம் கற்க வந்த மாணவர்களை ஒருங்கிணைத்து சிவபெருமான் சொன்ன பணியை செய்வதற்காக சிவநெறிச் சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தினார். இதுவே பின் சிவபுரம் ஆனது.