அறம்

வாழ்க்கையின் முடிவு மரணம் அல்ல முக்தி எனும் திருவடி நிழலே உயிர் சென்றடைய வேண்டிய முடிவான இடமாகும். மரணத்தின் பின் முக்தி அடைய முடியாது. முக்திக்கும் மரணத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. முக்தி என்பது பிணியற்ற உடலும், கவலையில்லாத மனமும், தெளிந்த சிந்தையும் உடையவனாக ஒருவன் தான் விரும்பிய சுகங்களை எல்லாம் விரும்பியவாறு அனுபவித்து இன்புறுவதற்கு வேண்டிய சிவானந்த பேரின்ப நிலையாகும். முக்தி நிலையில் வாழும் மனிதனே முழுமையாக வாழ்வான். வாழ்க்கையின் முடிவு அந்தமிலான் திருவடி அந்தத் திருவடி நிழலில் இருந்தவாறே வாழ்பவன் ஜீவன் முக்தன். ஜீவன் முக்தி நிலையே மனிதன் வாழ்க்கையைத் துன்பமின்றி வாழ்வதற்கு உரிய நிலையாகும். அந்த முக்தி நிலையை அடைவித்து நம்மை இன்புற வாழ்விப்பவனே சிவபெருமான். அவரை விரும்பி வழிபடலாம்; விரும்பியவாறும் வழிபடலாம்.